
‘கருப்பு’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய திரைப்படம் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்”. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து பிரபலமான இயக்குநர் வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக வளர்ந்துவரும் இளம் நடிகை மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் தமிழ் மற்றும் இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளான ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் மற்றும் பவானி ஸ்ரீ உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



