பனிமூட்டத்தால் விமான சேவை பாதிப்பு!

Advertisements

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று காலை வேளையில் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

சென்னையில் பனிமூட்டம் காரணமாக ரெயில் மற்றும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

சென்னையில் நிலவிய பனிமூட்டம் காரணமாக 10 புறப்பாடு விமானங்கள், 4 வருகை விமானங்கள் என 14 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதியடைந்தனர்.

இதனிடையே சுமார் 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம்வரை விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *