
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ஐ பிரிவுக்கான போட்டியில் ஈராக் அணியை வீழ்த்தி, நார்வே அணி வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவின் போஸ்டன் மைதானத்தில் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ஐ பிரிவுக்கான போட்டியில் ஈராக் மற்றும் நார்வே அணிகள் மோதின. இந்தப் போட்டியில், 29 ஆவது நிமிடத்தில் நார்வே நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் ஒரு கோல் அடித்தார். 39 ஆவது நிமிடத்தில் ஈராக் அணியின் அய்மன் ஹுசைன் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார். பின்னர், 43 ஆவது நிமிடத்தில் எர்லிங் ஹாலண்ட் தனது இரண்டாவது கோலை பதிவு செய்து, நார்வே அணியை 2-1 என்ற கணக்கில் முன்னிலைக்கு கொண்டு சென்றார். தொடர்ந்து, 76 ஆவது நிமிடத்தில் நார்வே அணியின் லியோ ஆஸ்டிகார்ட் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, போட்டியின் இறுதி நிமிடங்களில் ஈராக் வீரர் அய்மன் ஹுசைன் துரதிருஷ்டவசமாக ஓன் கோல் அடித்ததால், நார்வே அணி 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இதன்மூலம், 4-1 என்ற கோல் கணக்கில் ஈராக் அணியை வீழ்த்தி, நார்வே அணி வெற்றி பெற்றுள்ளது.



