போர் நிறுத்தம் ஒப்பந்தம் : வரவேற்ற பிரதமர் மோடி.!

Advertisements

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஏற்படும் இடையூறுகள் உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரான்சின் எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் சிறப்பு அமர்வில் பிரதமர் மோடி பேசிய போது, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஏற்படும் இடையூறுகள் உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன என்று தெரிவித்தார்.

அத்துடன் கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். மேற்கு ஆசியாவில் அமைதி முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தாங்கள் வரவேற்பதாகத் தெரிவித்தார். மேலும், நட்பு நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த மோதல், உயிர் மற்றும் உடைமை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *