
‘கங்குவா’ படத்தைத் தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ‘ரெட்ரோ’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
‘ரெட்ரோ’ திரைப்படத்தை ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2D எண்டர்டெய்னர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்குச் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ‘கண்ணாடி பூவே’ பாடல் பிப்ரவரி 13ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அடுத்து சூர்யா இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
