அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்.. ஜூன் 19-இல் சுவிட்சர்லாந்தில் கையெழுத்து.!

அமெரிக்கா – ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் வருகின்ற ஜூன் 19 ஆம் தேதி கையெழுத்தாகிறது என்று சுவிட்சர்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் குறித்து சுவிட்சர்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்கா – ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் வருகின்ற ஜூன் 19 ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் ஏரிக்கு அருகே மலைப்பகுதியில் உள்ள பர்கன்ஸ்டாக் சொகுசு விடுதியில் கையெழுத்தாகிறது.

மேலும், இருநாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் மேற்கொண்ட பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளும், சம்பந்தப்பட்ட இருநாடுகளும் இந்த இடத்தை முன்மொழிந்ததாகத் தெரிவித்துள்ளது. இதில், ஈரான் தரப்பில் அந்நாட்டின் முதன்மைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் கலந்துகொள்வார் எனக் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *