முஸ்லிம்கள் அவுரங்கசீப்பை ஹீரோவாகக் கருத மாட்டார் – பட்னாவிஸ் காட்டம்.!

Advertisements

வரலாறு துல்லியமாக கற்பிக்கப்பட்டிருந்தால், ஒரு முஸ்லிம் கூட அவுரங்கசீப்பை ஹீரோவாகக் கருத மாட்டார் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர-பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில சட்டசபையில், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உரையாற்றினார்.

அப்போது, முன்னதாக என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களில் 17 பக்கங்களில் முகாலய மன்னர்களை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. சிவாஜி மன்னர் குறித்து ஒரே ஒரு பக்கத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.

மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது சிவாஜி மகாராஜாவிற்கு, 20 பக்கங்களை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், கடந்த 70 வருடங்களில், வரலாறு துல்லியமாக கற்பிக்கப்பட்டிருந்தால், ஒரு முஸ்லிம் கூட அவுங்கரசீப்பை ஹீரோ என கருதியிருக்கமாட்டார்.

படையெடுத்தவர்களை ஹீரோக்களாகக் கருதுபவர்களை நாங்கள் எப்போதும் எதிர்ப்போம் எனவும், திப்பு சுல்தான் நல்லவரா, கெட்டவரா, என்ற விவாதத்திற்கு நான் செல்லவிரும்பவில்லை என்றும், எனினும் திப்பு சுல்தான்- சிவாஜி மகாராஜா இடையிலான எந்தவொரு ஒப்பீட்டையும் நாங்கள் எதிர்ப்போம் எனவும், பிரிட்டிஷிற்கு எதிராக திப்பு சுல்தான் போரிட்டிருக்கலாம்.

ஆனால், அவருடைய சொந்த ராஜ்ஜியத்தை காப்பாற்ற அவ்வாறு செய்தார் என்றும், எனினும், 75 இந்துக்கள், 33 ஆயிரம் நாயர்களையும் கொன்றார் என்றும் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *