மேற்கு வங்கத்தில் காங்கிரசை எதிர்ப்பதாகவும் , பாஜகவை நம்புவதாக மோடி பேச்சு..

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும், அதே நேரத்தில் மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு அதற்கு எதிராகச் செயல்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் துர்க்காபூரில் எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்னாற்றல், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை ஆகி துறைகளில் பணி முடிக்கப்பட்ட திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். புதிய திட்டப் பணிகளைத் தொடக்குவதற்கும் அடிக்கல் நாட்டினார்.

துர்க்காபூரில் பேசிய பிரதமர் மேற்கு வங்கத்தின் உட்கட்டமைப்புக்கும், போக்குவரத்துத் தொடர்புக்கும் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.

அதேநேரத்தில் மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு பொய், சட்டவிரோதம், கொள்ளை ஆகியவற்றின் அடையாளமாக விளங்குவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இதனால் மேற்கு வங்கத்தின் மக்கள் பாஜவை நோக்கி நம்பிக்கையுடன் திரும்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு எதிராகத் திரிணாமூல் காங்கிரஸ் அரசு செயல்படுவதாகவும், அதன் செயல்கள் அனைத்தும் மாநிலத்தின் இளைஞர்களின் நலனுக்கு எதிராக உள்ளதாகவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *