முறைகேடாக பச்சை பட்டாணி இறக்குமதி செய்த சுங்க அதிகாரிகள் கைது!

Advertisements

சென்னை துறைமுகம் வழியாக ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணியை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே பச்சை பட்டாணியை இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் மசூர் பருப்பு எனக் கூறி முறைகேடாகப் பச்சை பட்டாணியை இறக்குமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பச்சை பட்டாணி இறக்குமதி செய்யச் சுங்கத்துறை அதிகாரிகள் உதவியதாகக் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து பச்சை பட்டாணி இறக்குமதி செய்த விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் வருவாய் புலனாய்வுத்துறை நடத்திய சோதனையில் ரூ.60 லட்சம் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணி 4 கண்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் (DGFT) தற்போதைய கொள்கையின்படி, கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே பச்சைப் பட்டாணியை இறக்குமதி செய்ய முடியும், குறைந்தபட்ச இறக்குமதி விலை கிலோவுக்கு ரூ.200 (MIP) ஆகும்.

மஞ்சள் பயறு வகைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அதிகாரிகள் அதை மசூர் பருப்பாகத் தவறாக அறிவித்ததாகச் சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *