
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுக்குச் சொந்த கிராமத்தில் காது குத்து விழா நடத்தினார். உறவினர்கள், கிராமத்தார் கலந்து கொண்டனர். புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றன.
தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ள திருவீழிமிழலை கிராமத்தில் பிறந்தவர்.
இவர் தன்னுடைய பூர்வீக சொந்த கிராமமான திருவீழிமிழலை கிராமத்தில் அவருடைய குலதெய்வ கோவிலான மகா மாரியம்மன் திருக்கோவிலில் தன்னுடைய மூன்றாவது குழந்தையான ஒரு வயதுடைய ஆண் குழந்தைக்கு அவருடைய உறவினர்கள் முன்னிலையிலும் அவருடைய கிராமத்தார் முன்னிலையிலும் காது குத்தினார்.
அதன் பிறகு அவருடைய சொந்த கிராமத்தில் உள்ள கிராமத்தார் மற்றும் உறவினர்களுடன் புகைப்படம் எடுத்து அனைவரையும் மகிழ்வித்தார்.
இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
‘அமரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
