ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே அணி அதிரடி வெற்றி!

 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே அணி வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவின் போஸ்டன் மைதானத்தில் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஜெர்மனி மற்றும் பராகுவே அணிகள் விளையாடின. இதில், முதல் பாதி முடிவில் 1-0 என்ற புள்ளி கணக்கில் பராகுவே அணி முன்னிலையில் இருந்தது.
ஜெர்மனி அணி பின்தங்கி இருந்த நிலையில், இரண்டாவது பாதி 54 வது நிமிடத்தில் ஜெர்மனியின் கை ஹாவெர்ட்ஜ் ஒரு கோலை போட்டார். இதனால், போட்டி 1-1 என சமனானது. பின்னர் போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், 90 நிமிடங்களுக்குப் பின்னர் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது.
ஆனால், அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால், பெனால்டி ஷூட்அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், பராகுவே அணி 4 – 3 என்ற கோல் கணக்கில், பலம் வாய்ந்த ஜெர்மனியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *