மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் ஈரான்-அமெரிக்கா!

கத்தாரில் ஈரான் – அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டு 110 நாட்களுக்கு மேலாக நீடித்த நிலையில், அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 60 நாட்களுக்குள் நிரந்தரமான ஒப்பந்தம் மேற்கொள்ள இருதரப்பும் தீவிரம் காட்டி வந்தன. இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற சிங்கப்பூர் நாட்டுச் சரக்குக் கப்பல் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில், அந்நாட்டு ராணுவம் ஈரான் மீது அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதனால் இருதரப்புக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் நிலவியது.

இந்த சுழ்நிலையில், ஈரான் – அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஈரான் பேச்சுவார்த்தைக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பான கூட்டம் கத்தாரின், தோஹாவில் நடைபெறும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *