விராட் கோலியை பார்க்க மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்!

Advertisements

புதுடெல்லி:

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப் 2’ இடங்களைப் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதன் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கின.

இதில் ஒரு ஆட்டத்தில் டெல்லி-ரெயில்வே அணிகள் மோதுகின்றன. டெல்லி அணிக்காக 12 ஆண்டுகளுக்குப் பிறகு நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறக்கியுள்ளார்.

அவர் ரஞ்சி தொடரில் ஆடுவதால் ரசிகர்கள் அமர்ந்து பார்க்க வசதியாக 3 கேலரிகள் திறந்து விடப்பட்டது. அத்துடன் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 241 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து டெல்லி அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டெல்லி அணி பீல்டிங்கின்போது விராட் கோலி ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். அத்துடன் அவர் விராட் கோலியை நோக்கி ஒடி அவரது காலில் விழுந்தார்.

உடனே அவரை விரட்டிச் சென்ற பாதுகாவலர்கள் தூக்கி நிறுத்தினர். விராட் கோலி, பாதுகாவலர்களிடம் அவரை ஒன்றும் செய்யாமல் பத்திரமாக அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *