TASMAC: தீபாவளி கொண்டாட்டத்திற்கு செக்.. டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை.!

Advertisements

தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் மதுபிரியர்களுக்கு ஷாஎ் கொடுக்கும் வகையில் அக்டோபர் 28 முதல் 30 வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு நிதி தொடர்பான திட்டங்கள் செயல்படுத்துவதற்கு முக்கிய நிதி ஆதாரமாக இருப்பது டாஸ்மாக் மற்றும் பத்திர பதிவுத் துறை இந்த இரண்டு துறைகளின் மூலம் மட்டுமே நாளொன்றுக்கு அரசுக்குப் பல நூறு கோடி ரூபாய் வருவாய் வருகிறது.

வருகிற அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது.அந்த வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வரும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும். இந்த விழாவையொட்டி 144 தடை உத்தரவுக்களும் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். முத்துராம லிங்க தேவிரின் குருபூஜையையொட்டி முளைப்பாரி எடுத்தும் பாலபிஷேகம் செய்தும் மக்கள் வழிபடுவார்கள்.

மேலும் பசும்பொன்னில் உள்ள நினைவிடத்திற்கு முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள். இதன் காரணமாக எந்த வித சட்டம் ஒழுங்கு ஏற்படக் கூடாது என்பதற்காகப் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் . அந்த வகையில் ராமநாதபுரத்தில் வருகிற அக்டோபர் 28, 29 மற்றும் 30ஆம் தேதிகளில் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடக் கடந்தாண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் அனைத்து மதுக்கடைகளை மூடவும், மனமகிழ் மன்றங்கள், பார்கள் உள்ளிட்டவைகள் இயங்காது எனவும் மாவட்ட ஆட்சியர் கடந்தாட்னு அறிவித்தார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி அரசு மதுக்கடைகளை மூடவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். மேலும் சிவகங்கை மாவட்டத்திலும் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனவே இந்தாண்டும் வருகிற 28 முதல் 30ஆம் தேதிவரை தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகவுள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் குடிமகன்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் 3 நாட்கள் தொடர் டாஸ்மாக் விடுமுறையால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *