டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருட்டு – கல்லூரி மாணவர் கைது!

தருமபுரி:

பாலக்கோடு அருகே உள்ள டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பிகளைத் திருடிய 3 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள ஜக்கசமுத்திரம் பகுதியில் கோடிக்கானூர் கிராமத்தில் மின்வாரிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டிருந்தது. இரு நாட்களுக்கு முன்பு, மர்ம நபர்கள் அந்த டிரான்ஸ்பார்மரை கம்பத்திலிருந்து கீழே தள்ளி, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான காப்பர் கம்பிகளைத் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து மின்வாரிய உதவி பொறியாளர் திவாகர் மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின், செல்போன் சிக்னல்களின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச் சந்தை பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு கடைக்காரர் முருகன் (38), பந்தாரஅள்ளி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *