
அரபிக்கடலில் நிலவிய சக்தி வாய்ந்த புயலால் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் நிலவிய சக்தி புயல் படிப்படியாக வலுவிழக்க கூடும் நிலையில், தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் விஞ்ஞானி செந்தாமரை கண்ணன் பேசிய போது, வடகிழக்கு அரபிக்கடலில் நிலவிய சக்தி வாய்ந்த புயல் அதே பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெற்று, வடகிழக்கு அரபிக்கடலில் நிலவுகிறது.
இதைத்தொடர்ந்து அவர், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிற நிலையில், தமிழகத்தில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.




