
தமிழக அமைச்சரவை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடியது.
இதன்பிறகு, அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முடிவுகள்குறித்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மக்கள்தொகை குறைவாக உள்ளதினால் பாராளுமன்ற தொகுதிகளைக் குறைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது உள்ள 39 தொகுதிகளில் 8 தொகுதிகளைக் குறைத்து 31 ஆக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. 39 பாராளுமன்ற தொகுதிகளைக் குறைக்கும் அபாயம் நிலவுகிறது.
எண்ணிக்கையைப் பற்றிய கவலை மட்டுமல்ல, இது மாநிலங்களின் உரிமை தொடர்பான ஒரு முக்கிய பிரச்சனை. மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் சென்றுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் மீது ஒரு ஆபத்து மிதக்கும் நிலையில் உள்ளது.
8 பாராளுமன்ற இடங்கள் குறைவதால், நமது பிரதிநிதித்துவம் குறையும். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக 5-ந்தேதி அனைத்துக்க.



