சுதா கொங்கராவிடம் சிக்கித்தவிக்கும் ரவி மோகன்!

Advertisements

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமான பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் Dawn Pictures நிறுவனம் உருவாக்குகிறது.

இந்தப் படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் நாயகியாக ஸ்ரீலீலா காட்சியளிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார், மற்றும் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார்.

சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் வெளியான படத்தின் டைட்டில் டீசர் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது. இப்படம் இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.

இன்று காலையில், சுதா கொங்கரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் தொடர்பான சில புகைப்படங்களை வெளியிட்டார். அதில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *