அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி – இன்று ராஜினாமா செய்கிறார் இசக்கி சுப்பையா!

வேலுமணி ஆதரவாளரான, அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற சத்யபாமா, மதுராந்தகத்தில் வெற்றிபெற்ற மரகதம் குமரவேல், பெருந்துறையில் வெற்றிபெற்ற ஜெயக்குமார் ஆகியோர் நேற்று சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதங்களைப் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரனிடம் வழங்கினர்.
இந்நிலையில், வேலுமணி ஆதரவாளரான, அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இவர், இன்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனைச் சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கி ராஜினாமா செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *