இந்தியப் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகப் பிலிப்பைன்ஸ் அதிபர் தெரிவிப்பு.!

Advertisements

தனது இந்தியப் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகப் பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ரோமல்டாஸ் மார்க்கோஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்த பிலிப்பைன்ஸ் அதிபர்,  தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அதன்பின் இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்குப் புரிந்துணர்வு உடன்பாடுகள் கையொப்பமாகின.

இந்நிலையில் தனது பயணம், நிகழ்ச்சிகள் குறித்துத் தில்லியில் பிலிப்பைன்ஸ் அதிபர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தனது இந்தியப் பயணம் மிகவும் பயன்மிக்கதாக அமைள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்மூலம் இந்தியா – பிலிப்பைன்ஸ் நாட்டு உறவில் மேலும் நெருக்கம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *