Advertisements

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 44 ஆவது போட்டியில் மும்பையை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சேபாக்கத்தில் 19 ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 44 ஆவது போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய நமன் தீர் 57 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட் 67 ரன்களும், கார்த்திக் சர்மா 54 ரன்களும் எடுத்து அசத்தினர்.
Advertisements




