
நடிகர் அர்ஜுன் இயக்கிய ‘சீதா பயணம்‘ படத்தின் ‘பசவண்ணா‘ எனும் புதிய பாடல் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
நடிகர் அர்ஜுன் 1992 இல் வெளியான ‘சேவகன்’ படத்தின் மூலம் இயக்குனராக . இதன் பின்னர், ஜெய்ஹிந்த், தாயின் மணிக் கொடி உள்ளிட்ட 12 படங்களில் இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, 6 வருடங்களுக்குப் பின் தற்போது சீதா பயணம் என்ற புதிய படத்தை அர்ஜுன் இயக்கியுள்ளார். இதில், நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், இதில் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சீதா பயணம் படத்தின் ‘பசவண்ணா‘ எனும் புதிய பாடல் வெளியாகியுள்ளது. இப்படமானது வருகின்ற 14 ஆம் தேதி வெளியாகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் அர்ஜுன் படத்தை இயக்கியுள்ளதால் அவரின் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.



