
காசா போருக்கு முடிவு கட்டும்படி இஸ்ரேலின் முன்னாள் அதிகாரிகள் நூற்றுக்கணக்கானோர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இஸ்ரேலிய உளவுப்படை முன்னாள் தலைவர்கள், முன்னாள் இராணுவத் தலைவர்கள் உட்பட ஓய்வுபெற்ற 600 அதிகாரிகள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையான போரை உடனடியாக நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலுக்கு நெடுங்கால அச்சுறுத்தலாக இருக்காது என்று தாங்கள் நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் இஸ்ரேலிய முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

