தோல்வி பயத்தில் திமுக அரசு..!

Advertisements

தோ்தலில் தோல்வி அடைவோம் என்ற பயத்திலேயே மீண்டும் மடிக்கணினித் திட்டத்தையும், குடும்ப அட்டைதாரா்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தியுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி விமா்சித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வாழவந்தான்குப்பம் சாலையில், அதிமுக மகளிரணி எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய போது, அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டியத் திட்டங்களைத்தான் திமுக தொடக்கி வைக்கிறது என குற்றம் சாட்டினார். மேலும், சட்டப் பேரவைத் தோ்தலில் தோல்வி அடைவோம் என்ற பயத்திலேயே மீண்டும் மடிக்கணினித் திட்டத்தையும், குடும்ப அட்டைதாரா்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தியுள்ளது என விமா்சித்தாா்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *