
புதுடெல்லி:
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 8-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்து இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
இதில் ஒரு பட்ஜெட் மட்டும் இடைக்கால பட்ஜெட் ஆகும். அந்த இடைக்கால பட்ஜெட் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 8 பட்ஜெட்டுகளில் இன்று தாக்கல் செய்யப்பட்டதே குறைவான நேரத்தில் வாசிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும்.
மத்திய பட்ஜெட்டை சரியாகக் காலை 11 மணிக்குத் தாக்கல் செய்யத் தொடங்கிய நிர்மலா சீதாராமன் பிற்பகல் 12.17 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.
இதனால் சுமார் 1 மணி நேரம் 17 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார்.
2020-ம் ஆண்டு 2 மணிநேரம் 42 நிமிடங்கள் நிர்மலா சீதாராமன் வாசித்ததே அதிக நேரம் வாசித்த பட்ஜெட்டாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து மக்களவை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
