பிள்ளைகளை கொன்ற தாய்க்கு வாழ்நாள் சிறைத்தண்டனை..!

Advertisements
கணவனை விட்டு இன்னொருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த  அபிராமி தனது இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு கேரளாவிற்கு தப்பி செல்ல திட்டமிட்ட நிலையில் கைது செய்யப்பட்டார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தமிழ்நாட்டையே மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது தொடர்பான வழக்கை காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில் குழந்தைகளை கொடூரமாக கொன்ற தாய் அபிராமி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த அபிராமிக்கு கார்ணிகா, அஜய் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தன. இந்நிலையில் அபிராமிக்கு பிரியாணி கடையில் வேலை பார்த்த மீனாட்சி சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.மீனாட்சி சுந்தரத்துடன் கேரளாவில் சென்று வாழ்க்கை நடத்த முடிவு செய்த அபிராமி தனது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முயன்றார். இதில் அஜய், கார்னிகா என்ற இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.

விசாரணையில் அபிராமி குழந்தைகளுக்கும்  விஷம் அளித்தது தெரியவந்தது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இது தொடர்பான வழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் அபிராமியை குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்த மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இதில் குழந்தைகளை கொன்ற தாய் அபிராமிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அபிராமி சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மீனாட்சி சுந்தரமும் சாகும் வரை சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கள்ளக்காதலில் கருத்தரிக்கும் குழந்தையை கருவிலேயே சிசுவதை செய்வது.  கள்ளக்காதாலில் பிறக்கும் குழந்தைகளை யாருக்கும் தெரியாமல் வீசி விட்டுச் செல்வது,  குழந்தையை கொள்வது. குழந்தையை விலைக்கு மற்றவர்களிடம் விற்றுவிடுவது. குழந்தையை துன்புறுத்துவது போன்ற கொடூர சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும்,   எந்த வகையிலும் தப்பிக்காதவகையில்  பாரபட்சமின்றி அபிராமி , மீனாட்சி சுந்தரம் இருவருக்கும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தண்டனையை போன்று கடும் தண்டனையை வழங்கினால் மட்டுமே குழந்தைகள் மீதான கொடுமையை தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *