தவெக கொடி விவகாரத்திற்கு பதிலளித்து பேசிய எடப்பாடி.!

Advertisements

“தவெகவில் விருப்பப்பட்டவர்கள் தாமாக வரவேற்பு தருகின்றனர். தலைமையின் ஆணையைப் பெற்று வர வேண்டும் எனவும் கூட நாங்கள் அவர்களிடத்தில் எங்கள் மாவட்டச் செயலாளர்கள் மூலம் சொன்னோம். ஆனால், அவர்கள் ஆர்வத்தோடு வந்து கலந்துகொள்கிறார்கள்.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஒரு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கூட்டணிக்கு பிள்ளையார் சுழி” என்றும் கூட பேசியிருந்தார். அதிமுக கூட்டணிக்கு தவெக செல்கிறதா? தவெகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவருகிறார்களா என பல்வேறு கேள்விகளும் பல்வேறு தரப்பினர் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம், நங்கவள்ளி பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “அவர்கள் ஆர்வத்தோடு வந்து கலந்துகொள்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதில் ; “தவெகவில் விருப்பப்பட்டவர்கள் தாமாக வரவேற்பு தருகின்றனர். தலைமையின் ஆணையைப் பெற்று வர வேண்டும் எனவும் கூட நாங்கள் அவர்களிடத்தில் எங்கள் மாவட்டச் செயலாளர்கள் மூலம் சொன்னோம். ஆனால், அவர்கள் ஆர்வத்தோடு வந்து கலந்துகொள்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு விமர்சனம் செய்துவருகின்றனர். அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்தே அவர்கள் எங்களைப் பற்றிதான் விமர்சனம் செய்துவருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், “அதிமுக தவெக கூட்டணி ஏற்பட்டால், பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழுட்டிவிட்டுவிடுவார் என டிடிவி தினகரன் சொல்லியிருக்கிறார்” என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “வேண்டுமென்றே அவர் தவறான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *