ஐ.நா. அமைதிப்படையில் 2 இலட்சத்து 90 ஆயிரம் இந்திய வீரர்கள் பங்கேற்ப்பு.!

Advertisements

கடந்த பத்தாண்டுகளில் ஐம்பதுக்கு மேற்பட்ட ஐ.நா. அமைதி காக்கும் திட்டங்களில் இந்தியாவில் இருந்து இரண்டு இலட்சத்து 90 ஆயிரம் படைவீரர்கள் பங்கேற்றுள்ளதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஐ.நா அமைதி காக்கும் படைக்கு வீரர்களை அனுப்பும் நாடுகளின் மாநாடு தில்லியில் நடைபெற்றது. இதில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பங்கேற்றுப் பேசினார்.

அப்போது, கடந்த பத்தாண்டுகளில் ஐம்பதுக்கு மேற்பட்ட அமைதிகாக்கும் திட்டங்களில் இந்தியாவில் இருந்து இரண்டு இலட்சத்து 90 ஆயிரம் படைவீரர்கள் பங்கேற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

காங்கோ, கொரியா, தெற்குச் சூடான், லெபனான் உள்ளிட்ட நாடுகளில் சமூகத்தை மறுகட்டமைக்கவும் அச்சுறுத்தலுக்குள்ளானே பொதுமக்களைப் பாதுகாக்கவும் இந்தியப் படைவீரர்கள், காவல்துறையினர், மருத்துவப் பணியாளர்கள் பன்னாட்டுச் சமூகத்தினருடன் தோளோடு தோள்நின்று பணியாற்றியதாகக் குறிப்பிட்டார்.

அமைதிகாக்கும் பணி என்பது ஓர் இராணுவ நடவடிக்கையை விட மேலானது என்றும், பொறுப்புணர்வு மிக்கது என்றும் தெரிவித்தார். தகராறு, வன்முறை ஆகியவற்றுக்கு மேல் மனிதநேயத்தை நிலைநிறுத்த வேண்டியதை அது நினைவூட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

போராலும் பஞ்சத்தாலும் பேரழிவைச் சந்தித்த மக்கள் ஐ.நா. அமைதிகாக்கும் படையின் நீலத் தலைக்கவசத்தைக் கண்டதும் இந்த உலகத்தால் நாம் கைவிடப்படவில்லை என்று உணர்வதாகவும் தெரிவித்தார்.

அண்மைக்காலங்களில் சில நாடுகள் வெளிப்படையாகப் பன்னாட்டு விதிகளை மீறுவதாகவும், குழிதோண்டிப் புதைக்க முயல்வதாகவும், அடுத்த நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தத் தங்கள் சொந்த விதியை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

தியாகம் இல்லாமல் நமது பங்களிப்பு இருக்க முடியாது என்றும், ஐ.நா. அமைதிகாக்கும் பணியின்போது 180க்கு மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *