கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டை எதிர்க்கும் 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்..
அமெரிக்கா கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் பல நாடுகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்கவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டை சேர்ந்த மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் கிரீன்லாந்து விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த 8 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து போன்ற எட்டு நாடுகளுக்கு இந்த வரி விதிக்கப்படும் என்றும், சுங்க வரி வரும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கிரீன்லாந்தை முழுமையாக அமெரிக்கா வாங்குவதற்கான ஒப்பந்தம் ஜூன் 1-க்குள் ஏற்படாவிட்டால், ஐரோப்பிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பத்து சதவீத சுங்க வரி மேலும் 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கிரீன்லாந்து தற்போது டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

