மும்பை இந்தியன்ஸ் VS சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதல்.!

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 41 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் 19 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 41 ஆவது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.

இதில், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான வீரர்களும் ஐதராபாத் அணியின் கேப்டன் பாட் கமின்ஸ் தலைமையிலான வீரர்களும் பங்கேற்கின்றனர்.

இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில், மும்பை அணி 15 முறையும், ஐதராபாத் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்றையப் போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *