அமெரிக்காவிற்கு ரொக்கம் கொடுத்த ரஷ்யா..!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து அலாஸ்கா நகரில் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை என்று தெரிவித்த நிலையில், புதின், தனது மூன்று ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப 2 கால் கோடி ரூபாயை ரொக்கமாக அமெரிக்காவிற்குக் கொடுத்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ செய்தியாளர்களிடம் பேசியப் போது, ரஷ்யா மீது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் இருப்பதால் வங்கிகளைப் பயன்படுத்த முடியாத காரணத்தால், எரிபொருள் நிரப்புவதற்கு ரொக்கமாகப் பணம் செலுத்த வேண்டியிருந்தது எனத் தெரிவித்தார்.

மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் உக்ரைன் போரினால் ரஷ்யா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது எனக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *