Mobile phone explode: இளம்பெண்ணின் உயிரைப் பறித்த செல்போன்!

Advertisements

செல்போனில் சார்ஜ் போட்டப்படி பேசியதால் போன் வெடித்து பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்தவர் கோகிலா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் உயிரிழந்தார். தனது மகனுடன் வசித்து வந்த  கோகிலா, கபிஸ்தலம் என்ற ஊர் அருகே செல்போன் கடை மற்றும் வாட்ச் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல,  நேற்று காலை இவர் கடைக்குச் சென்றிருக்கிறார். அங்குக் கோகிலா கடை வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். அப்போது, மதியம் செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு தனது வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் இவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அப்போது, சார்ஜ் போட்டப்படியே செல்போனை எடுத்துப் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. போனில் பேசிக் கொண்டி இருந்தபோது, திடீரெனச் செல்போன் வெடித்து சிதறியது. இதில், கடை முழுவதும் தீப்பற்றியது. உடனே இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். பின்னர், தீக்காயங்களுடன் கிடந்த கோகிலாவை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

கோகிலா உயிரிழந்த சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சார்ஜ் போட்டபோது வெடித்ததால் உயிரிழந்தாரா? மின் கசிவு காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கோகிலாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்ட செல்லப்பட்டது. செல்போனில் சார்ஜ் போட்டப்படி பேசியதால் போன் வெடித்து பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *