நீங்கள் வாங்கும் பொருட்களில் இந்தியரின் வியர்வை இருக்க வேண்டும் மோடி பேச்சு

நீங்கள் வாங்கும் பொருட்களில் இந்தியரின் வியர்வை இருக்க வேண்டும் என்று, மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திரமோடியின் 75-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.சார்பில் வெவ்வேறு வகையான சேவை பணிகள் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன.

அவருக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்திற்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திரமோடி, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டினார்.

அதன்பின்னர் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய வேண்டுமென்றால், ஆத்மநிர்பார்-பாரத் என்கின்ற சுயசார்பு இந்தியா என்பதே அதற்கான வழியாகும் என்று தெரிவித்தார்.

மேலும், இது பண்டிகைக்களுக்கான காலம் என்பதால், நீங்கள், உள்நாட்டு பொருட்கள் என்ற மந்திரத்திற்கு, தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், 140 கோடி இந்தியர்களிடமும் நான் வைக்கும் வேண்டுகோள் என்னவெனில், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என்றும், நீங்கள் வாங்கும் பொருட்களில் இந்தியரின் வியர்வை இருக்க வேண்டும் என்றும்  பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *