ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு அந்நாட்டில் சதுரங்க விளையாட்டுக்குத் தடை.!

Advertisements
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு அந்நாட்டில் சதுரங்க விளையாட்டுக்குத் தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமியச் சட்டத்துக்கு எதிரான பண்பாட்டு, சமுதாய, விளையாட்டு நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்து வருகிறது.
இஸ்லாமியச் சட்டப்படி சதுரங்கம் விளையாடுவது குற்றமாகும். இதனால் மதக் காரணங்களை முன்னிட்டுச் சதுரங்க விளையாட்டுக்கும், அது தொடர்பான நடவடிக்கைகளுக்கும் தடை விதிப்பதாக அந்நாட்டு மத விவகாரங்களுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதேபோல் ஆப்கானிஸ்தான் சதுரங்க விளையாட்டுக் கூட்டமைப்பையும் அந்த அமைச்சகம் கலைத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுத் தொடர்பான நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை அந்நாட்டு விளையாட்டு அமைச்சமும் உறுதிப்படுத்தியுள்ளது.
சதுரங்க விளையாட்டுக்குத் தடை விதித்துள்ளது அந்நாட்டு மக்களின் சுதந்திரத்தின் மீது தலிபான்களின் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. பன்னாட்டுச் சமூகம் அழுத்தம் கொடுத்து இந்த முடிவுகளைத் திரும்பப் பெறச் செய்யும் வரை இந்தக் கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *