சரத்பவார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி.!

Advertisements

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உடல்நலக் குறைவால் புணேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு, தொண்டை தொடர்பான பிரச்னைகள் இருந்ததாலும், இருமல், காய்ச்சல் நீண்ட நாள்களாக இருந்துவந்த நிலையில், இன்று சுவாசிப்பதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, சரத் பவார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாக பாராமதியில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக, புணேவில் உள்ள ரூபி ஹால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சரத் பவார் உடல்நலம் குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவரது மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா-சுலே தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *