
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மிகவும் பரபரப்பான செய்தி வென்று நடந்தேறியுள்ளது. அது என்னன்னா அனைவராலும் பயங்கரமாக எதிர்பாக்கப்ட்ட தேமுதிக யாருடன் இணையும் என்ற கேள்வியின் விடையே ஆகும் . இன்று திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்த்தித்து திமுக கூட்டணியில் தன்னை இணைத்துக்கொண்டார் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் .
தமிழக அரசியலில் மிக முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான தேமுதிகவின் இந்த முடிவு ஆளும் திமுக கூட்டணியை மேலும் வலுப்பெறச்செய்யும் என்பது உறுதியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த தேமுதிகவின் நிலைப்பாடு இன்று உறுதிசெய்யயப்பட்டுள்ள நிலையில் திமுக தொண்டர்களையும் தேமுதிக தொண்டர்களையும் இது மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது.
இன்று காலை தனது சகோதரர் சுதீஷ் மற்றும்காட்சி நிர்வாகிகளுடன் சென்று , பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் . முதல்வரை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து இந்த இணைப்பினை நிகழ்த்தியுள்ளார் .
முதல்வர் முக ஸ்டாலின் பிரேமலதா விஜயகாந்தையும் அவரது சகோதரரையும் பூங்கோத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றார். முதல்வரின் சகோதரி கனிமொழி மற்றும் திமுகவின் மூத்த ஆளுமைகள் உடனிருந்தனர்.



