தமிழக தேர்தல் எப்போது? தேர்தல் கமிஷன் பரபரப்பு..!

Advertisements
தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி தொண்டர்களும் வாக்காள பெருமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எப்பொழுது என்ற அறிவிப்பு வெளியாக இருக்கிறது. வருகிற மே மாதம் 10ஆம் தேதியுடன் தமிழ்நாட்டின் தற்போதைய ஆட்சி முடிவடைந்து மீண்டும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறது .
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது . தமிழ்நாடு மட்டுமின்றி மேற்கு வங்காளம் , அசாம் , கேரளா,  புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைகளின் பதவி காலமும் முறையே மே மாதம் ஏழாம் தேதி 20ஆம் தேதி 23ஆம் தேதி ஜூன் மாதம் 13ஆம் தேதி ஆகிய நாட்களில் நிறைவடைகிறது .
தமிழ்நாடு உள்ளிட்ட இந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என தெரிகிறது இந்த தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் எப்பொழுது நடைபெறும் என்ற தேதி குறித்த தகவல் வருகிற மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
அதிகபட்சம் மார்ச் மாதம் 10ஆம் தேதிக்குள் தேர்தல் தேதி வெளிவந்து விடும் என சொல்கிறார்கள். தமிழ்நாடு கேரளா புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும் அசாம் மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.  இதற்கிடையே தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் மார்ச் மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது என்பது முக்கிய செய்தி ஆகும் ..
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *