
புதுச்சேரி சிஸ்கார்ப் டெக்னாலஜி தனியார் நிறுவனம் சார்பில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆர்த்திக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி விவிபி நகர் அருகே அமைந்துள்ள சிஸ்கார்ப் டெக்னாலஜி தனியார் நிறுவனம் சார்பில் புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமி ஆர்த்திக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தனியார் நிறுவன நிர்வாகி கமல்துறை தலைமையில் நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு சிறுமி ஆர்த்திக்கு நீதி கிடைக்க வேண்டும் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறி கோஷங்களை எழுப்பினார்கள்.
அதனைத் தொடர்ந்து ஐந்தாம் வகுப்பு மாணவி ஆர்த்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் பேசிய தனியார் நிறுவன அதிகாரி கமல்துரை சிறுமி ஆர்த்திக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் போதை என்ற அரக்கன் இது போன்ற விஷயங்களுக்குக் காரணமாக உள்ளான் எனவே அனைவரும் போதைப் பழக்கத்தைக் கைவிட வேண்டும், அது மட்டுமின்றி அரசு போதைப் பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி இதில் ஈடுபடும் குற்றவாளிகள்மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

