
இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானி இளையராஜாவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி வாழ்த்து பதிவிட்டுள்ளார். அதில், இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர் என்றும் ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டியதாகவும் குறிப்பிட்டார்.
அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும் என்று தெரிவித்தார்.



