இந்தியா கூட்டணி தலைவராகும் மு க ஸ்டாலின்: அதிர்ச்சியில் மோடி.!

Advertisements
பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான அகில இந்திய அளவில் ஓன்று திரட்டப்பட்ட இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைவராகும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இந்தியா கூட்டணிக்கு மு க ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என குரல் எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்
இதனால் அகில இந்திய அளவில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழப் போவதாக தெரிகிறது .கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்தியா என்ற பெயரில் ஒரு கூட்டணியை அமைத்தன இந்த கூட்டணி சார்பில் இந்தியா முழுவதும் பாஜகவை எதிர்த்து வேட்பாளர்கள் நிறுத்தப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பலத்தை பெற்றது அத்துடன் எதிர்க்கட்சியாகவும் இடத்தை பிடித்தது .
பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த முடியாவிட்டாலும் ஓரளவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது . இந்த நிலையில் தற்பொழுது இந்தியா கூட்டணிக்கு சரியான தலைவர் இல்லாத நிலையில் அந்தக் கூட்டணி செயல்பாடுகள் இல்லாமல் இருக்கிறது. தற்பொழுது காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணியின் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் இந்த கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் தற்பொழுது மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது .இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு வருகிற ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு ஒரு நல்ல தலைவர் பொறுப்பேற்க வேண்டும் என்ற குரல் இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுந்திருக்கிறது .
அந்த வகையில் , மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயர் கேரளாவில் பேசும் போது இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க மு க ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறது என பேசியிருக்கிறார் . அவர் பேசும் பொழுது இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் மிகச் சரியான நபர் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தான் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்க்குமாறு காமராஜரிடம் கேட்டபோது அதைக் கேட்ட அனைவரிடமும் ஒரே வாக்கியத்தை காமராஜர் சொன்னார் எனக்கு ஆங்கிலம் தெரியாது இந்தி தெரியாது பிறகு எப்படி பிரதமராவது என்று கேட்டார் .
இப்போது,  மு க ஸ்டாலின் அதே நிலையில் தான் இருக்கிறார் . இருந்தபோதிலும் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைப்பதற்காக யாராவது ஒரு நபர் முழு நேரத்தையும் செலவிட முன் வந்தால் ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக முடியும் அந்த ஒருங்கிணைப்பு பணியை செய்ய ஸ்டாலின் தான் பொருத்தமானவர் என்று தெரிவித்திருக்கிறார் .
இதனை தொடர்ந்து,  சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே பேசும் பொழுது இந்தியா கூட்டணிக்கு தேசிய அளவில் தலைவராகும் தகுதி மு க ஸ்டாலினுக்கு இருக்கிறது அதேபோல் மம்தா பானர்ஜியூம் தலைவராகலாம் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் . இதனிடயே திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள்தலைவர் திருமாவளவனிடம் மணி சங்கர் ஐயர் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது .
இதற்கு தொல் திருமா பதிலளிக்கும் பொழுது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் கூறிய கருத்து வரவேற்க வேண்டியது. அவர் முன்மொழிந்ததை நான் வழி மொழிகிறேன் என்று கூறி இருக்கிறார் . இது தொடர்பாக நாம் தமிழர் சீமான் கருத்து தெரிவிக்கும் பொழுது இந்தியா கூட்டணியை தலைமை தாங்கி நடத்திச் செல்வதற்கு மு.க ஸ்டாலினுக்கு முழு தகுதி இருக்கிறது என்று கூறியிருக்கிறார் .
கடந்த காலங்களில் மு.க ஸ்டாலினுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் நாம் தமிழர் சீமான் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது . இதனிடையே அகில இந்திய அளவில் பிரதமர் மோடியை எதிர்ப்பதில் முதல்வர் மு க ஸ்டாலின் மட்டும் தான் முதலிடத்தில் இருக்கிறார் . அவர் மோடிக்கு எதிராகவும் பாஜகவிற்கு எதிராகவும் தனது கருத்தில் இருந்து பின் வாங்கவில்லை பிரதமர் மோடி மு.க ஸ்டாலினுடன் மோத முடியாமல் திண்டாடி வருகிறார்.
இந்த நிலையில் , மு க ஸ்டாலின் அகில இந்திய கூட்டணிக்கு தலைவராகும் பொழுது ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்தலாம் என்ற கருத்தும் ஏற்பட்டுள்ளதால் வெகுவிரைவில் இந்தியா கூட்டணிக்கு மு.க ஸ்டாலின் தலைவராகவும் வாய்ப்பு இருக்கிறது என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது ..
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *