
தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஜூன் 2) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
தமிழக பாஜக வரலாற்றில் மாநிலத் தலைவர் பொறுப்பை வகித்த முதல் பெண் தலைவர் என்ற பெருமைக்குரியவர் தமிழிசை சௌந்தரராஜன். கட்சியில் மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். மேலும், தெலுங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராகவும் சிறப்பாகப் பணியாற்றி மக்கள் செல்வாக்கைப் பெற்றவர்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், “இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவரும், முன்னாள் தெலுங்கானா கவர்னருமான அன்பு சகோதரி டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
தமிழிசை சௌந்தரராஜன் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் மற்றும் அனைத்து வளங்களும் பெற்று, மக்கள் பணியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட எல்லாம் வல்ல முருகப்பெருமானின் அருள் என்றும் துணையாக இருக்கட்டும். வாழ்வில் மேலும் பல வெற்றிகளும், சாதனைகளும் கிட்ட எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.


