
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக, காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஏற்கெனவே அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் என நான்கு பிரிவுகளாகப் பாஜக சிதறடித்துள்ளதாகவும் செல்வப் பெருந்தகை குற்றஞ்சாட்டினார்.




