நீட் தேர்வு உயிரிழப்புகளைத் தடுக்க 15 வழிகாட்டு நெறிமுறைகளை – உச்சநீதிமன்றம் !

Advertisements

நீட் தேர்வு உயிரிழப்புகளைத் தடுக்க 15 வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 17 வயது நீட் பயிற்சி மாணவி 2023ஆம் ஆண்டுச் சந்தேகத்துக்கு இடமான முறையில் விடுதியில் உயிரிழந்தார்.  இதுகுறித்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. பின்னர் நீட் உயிரிழப்புகளைத் தடுக்க 15 வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

அதன்படி நீட்பயிற்சி மையங்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளை இரண்டு மாதங்களில் வெளியிடுமாறு மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. பின்னர் விதிமுறைகள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விபரங்கள்குறித்து 3 மாதங்களில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தவிர நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களுக்குரிய மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும். இதனை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *