Jana Nayagan movie First Roar :ஜனநாயகன் படக்கதை இதுதானா?

Advertisements
தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு காணக் காத்திருக்கும் நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தின் முழு நீளக் கதையை இப்போது காணப் போகிறீர்கள்
இது உங்கள் ஜெம் தொலைக்காட்சி வழங்கும் விசேஷ படக் காட்சி ஆகும்
தளபதி விஜயின் சினிமா வரலாற்றில் கடைசி படம் தான் ஜனநாயகன் . இந்தத் திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவருகிறது .முன்னதாகத் தளபதி 69 எனப் பெயரிடப்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி இந்தப் படம்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.ஜனநாயகன் படப்பிடிப்புக்கு முன்னதாகவே இதுதான் எனது கடைசி திரைப்படம் என அறிவித்த கையோடு நடிகர் விஜய் அரசியல்வாதியாக மாறிவிட்டார்.
ஒரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய கையோடு இன்னொரு பக்கம் ஜனநாயகம் படத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.இந்தப் படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் பிரியாமணி சுருதிஹாசன், வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் அளித்திருக்கிறார்கள் .படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எச்வினோத் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் நாராயணா ஜெகதீஷ் பழனிச்சாமி லோகித் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.சத்தியன் ஒளிப்பதிவில் பிரதீப் எடிட்டிங் செய்திருக்கிறார். இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமையைப் பிரபல சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது
நடிகர் விஜய் அரசியல் களத்தில் குதித்ததால் நிச்சயமாக ஜனநாயகன் திரைப்படம் அரசியல் சார்ந்த படமாகத்தான் இருக்கும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.உண்மையும் அதுதான் ஆனால் இந்தத் திரைப்படத்தில் காட்டப்படும் அரசியல் என்பது வேறு விதமாக இருக்கிறது.
நடிகர் விஜய் இந்தத் திரைப்படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். நாட்டில் நடைபெறும் ஊழலையும் தேர்தல் சூதாட்டங்களையும் மையமாக வைத்து இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது .ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக வலம் வரும் விஜய் தேர்தல் சமயங்களில் நடக்கும் பிரச்சாரத்தின்போது மக்களை எப்படியெல்லாம் அரசியல்வாதிகள் குழப்புகிறார்கள் வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் ஓட்டுக்குப் பணம் கொடுத்து மக்களைத் திசை திருப்புவது போன்ற விஷயங்களில் ஏற்படும் பிரச்சனைகளை ஒரு போலீஸ் அதிகாரியாகத் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்துகிறார் தளபதி விஜய்
இது மட்டுமல்ல ஓட்டு போடுவதற்கு பணம் வாங்கக் கூடாது நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும் எனத் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அதிரடி வசனங்களும் இடம் பெற்றுள்ளன .தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்றும் நடிகர் விஜய் இந்தத் திரைப்படத்தில் அறிவுரை சொல்கிறார் .வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடுவதால் இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க தேர்தலை மையமாக வைத்து வெளி வருகிறது
ஈரோடு சிவகங்கை மதுரை ஆகிய பகுதிகளில் தேர்தல் சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன மதுரையில் நடைபெறும் தேர்தலில் ஏராளமான குளறுபடிகள் ஏற்படுகின்றன . இதில் அப்பாவி பொதுமக்கள் சிக்கிக் கொள்கிறார்கள் அவர்களை நடிகர் விஜய் பறந்து வந்து காப்பாற்றுகிறார் .இந்தப் படம் முழுவதுமாக நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேர்தல் சம்பந்தப்பட்ட படமாக வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிராகப் பல பஞ்ச் வசனங்களும் இடம்பெற்று இருப்பதாகச் சொல்கிறார்கள்.சுருக்கமாகச் சொன்னால் ஓட்டு போடுவது குறித்த ஒரு விழிப்புணர்வு படமாக ஜனநாயகன்படம் பொங்கலுக்கு வருகிறது .விஜய் நடித்திருக்கும் அனைத்து காட்சிகளும் திரையரங்கை அதிர வைக்கும் மாஸ் காட்சிகளாக இருக்கும் என்கிறார்கள் படப்பிடிப்பு குழுவினர்.
ஒட்டு மொத்தமாக விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு இந்த ஜனநாயகன் திரைப்படம் தேர்தல் பிரச்சார படமாக அமையும் எனத் தெரிகிறது
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *