Israel: நெதன்யாகுவின் மகனின் திருமணம் ஒத்திவைப்பு !

Advertisements

இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் காரணமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிலவி வருகிறது.  ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில், அந்நாட்டின் அணுசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.  இதைத் தொடா்ந்து, இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்தத் தாக்குதல் தொடா்ந்து 3-ஆவது நாளைக் கடந்தும் நீடித்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள பெண்கள், குழந்தைகள் உள்பட 406 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் இஸ்ரேலின் ஹைஃபா நகரில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் காரணமாக இன்று  நடைபெறவிருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *