யூடியூபர் மாரிதாஸ் கைது – சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!

Advertisements

மதுரை, மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள பிரபல யூடியூபர் மாரிதாஸை அவரது இல்லத்தில் வைத்து சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

அண்மைக் காலமாக தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதோடு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உண்மைக்குப் புறம்பான புகைப்படங்களையும், தகவல்களையும் வெளியிட்டதாகக் கூறி அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, சுமார் 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் தனது வீட்டிற்கு வந்துள்ளதை மாரிதாஸ் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தெரிவித்து வந்த நிலையில், தற்பொழுது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதற்காக அவர் ஏற்கெனவே பலமுறை கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *