
சென்னை:
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வரும் 24-ம் தேதி மாலை 4 மணிக்குப் புதிய மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், பூத் கமிட்டிகளை அமைப்பது, கழக வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்துவது, கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களை அணியில் சேர்ப்பது போன்ற முக்கியமான விவகாரங்கள்குறித்து விவாதிக்கப்படும்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
