காங்கிரஸ் கூட்டணி முறிவு – இந்தியா கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிக்கிறது தி.மு.க.!

Advertisements

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸுடனான கூட்டணி முறிவால், இன்று டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தை தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்த்தது. மேலும், ஆட்சியிலும் பங்கு பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் செயல், தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என தி.மு.க. கடுமையாகச் சாடியுள்ளது.
காங்கிரஸ் கட்சியுடனான உறவு முறிவைத் தொடர்ந்து, இன்று டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே மற்றும் இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *