தவெக அரசு தவறான பாதையில் செல்கிறது – டி.டி.வி தினகரன் விமர்சனம்!

திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கெஞ்சி ஆதரவு பெற்று விஜய் ஆட்சி அமைத்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கெஞ்சி ஆதரவு பெற்று விஜய் ஆட்சி அமைத்துள்ளதாக விமர்சித்தார். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்ற பெயரில் மக்கள் ஒரு பேராபத்தை இன்றைக்கு ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள் என்று கூறினார்.
மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் கேட்கலாம் ஆனால், சட்டம் ஒழுங்கை சரி செய்ய அவகாசம் கேட்கக்கூடாது என்று தெரிவித்தார். அமமுகவில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரை ஆசை வார்த்தைகளைக் கூறி, அவரை விஜய் தன் பக்கம் இழுத்து கட்சியில் இணைத்துக் கொண்டதாக குற்றச்சாட்டினார்.
தவெக அரசு தவறான பாதையில் செல்கிறது என்பதை மக்கள் அறிவர் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *