சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டப்பட்ட நாளைத் தமிழ்நாடு நாளாகத் தமிழக அரசு கொண்டாடுகிறது.
இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1967 ஜூலை 18ஆம் நாள் தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டுக் காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள் இன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்குத் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டித் ‘தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு’ என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான் தமிழ்நாடு நாள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

